search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கன மழை"

    • தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது.
    • 3500 ஏக்கர் உப்பளம் காலையில் பெய்த கனமழையால் மழை நீரில் மூழ்கியது.

    விழுப்புரம்:

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சில நாட்களே ஆன நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்த மழை சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்னும் 4 நாட்கள் வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதன்படி விழுப்புரம் மாவட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குறிப்பாக மரக்காணம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது.

    வங்காள விரிகுடா பகுதியான மரக்காணத்தில் சுமார் 19 மீனவ கிராமங்கள் உள்ளன. எனவே வானிலை அறிவித்தபடி மரக்காணம் மற்றும் அதனை சுற்றி யுள்ள பகுதிகளில் காலை 6 மணி முதல் விடாமல் கனமழை பெய்து வருகிறது. இந்த மழை மரக்காணம் மற்றும் மரக்காணத்தை சுற்றியுள்ள 60 கிராமங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் மரக்கா ணத்தில் உள்ள விவசாய நிலங்கள் ஏரி குளங்களில் நீர் வரத்து அதிகமாக வருகிறது. கன மழை கொட்டி வருவதால் விவசாய நிலங்களில் மழை நீர் கடல் போல் சூழ்ந்து ள்ளது.

    இதனால் அந்த பகுதியில் நெல் மணிலா மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்தி ருக்கும் விவசாய பெருங்குடி வாழ் மக்கள் அனைவரும் பாதிப்புக்கு ள்ளாகி உள்ளனர். குறிப்பாக மரக்கா ணத்தில் உள்ள 3500 ஏக்கர் உப்பளம் காலையில் பெய்த கனமழையால் மழை நீரில் மூழ்கியது. இதனால் உப்பள உற்பத்தி நிறுத்தப்பட்டது. உப்பு உற்பத்தி நிறுத்தப்பட்டதால் இந்த உப்பளத்தை நம்பி இருக்கும் 5000 தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அன்றாடம் வயிற்றுப் பிழப்பிற்கு அல்லோள்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த மழை மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளான அனுமந்தை, கீழ்புத்துப்பட்டு ,ஆலத்தூர், பிரம்மதேசம், எக்கியார்குப்பம் உள்ளிட்ட 60 கிராமங்களில் தொடர்ந்து மழை பெய்த வண்ணம் உள்ளது. இதனால் பாதிப்படைந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெய்து வரும் கனமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுகின்றனர்.

    • மழை வெள்ளம் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் செல்லும் கார்கள், பைக்குகளும் மழை நீரில் தத்தளித்தன.
    • பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் மழையின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இங்கு தினமும் கனமழை பெய்து வருகிறது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு, பெங்களூருவுக்கு 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 60 முதல் 120 மில்லி மீட்டர் வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடைமழை பெய்து வருகிறது. ராஜாஜிநகர், மெஜஸ்டிக், சேஷாத்திரிபுரம் கே.ஆர்.மார்க்கெட், ஜே.பி.நகர், சாந்திநகர், எம்.ஜி.ரோடு, இந்திராநகர், காட்டன்பேட்டை, விஜயநகர், பசவேஸ்வரா நகர், மைசூரு ரோடு, அக்ரஹாரா தாசரஹள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் போக்குவரத்து சிக்னல்களில் வாகனங்கள் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன.

    நேற்று மாலை பெய்த மழை, நள்ளிரவு வரை வெளுத்து கட்டியது. மழை வெள்ளம் காரணமாக சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாலையில் செல்லும் கார்கள், பைக்குகளும் மழைநீரில் தத்தளித்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது, சாலைகள் சேதம் அடைந்தன. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பெங்களூரு நகரின் மத்திய, கிழக்கு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்தது.

    நகரின் கிழக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதியில் உள்ள பல சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் வடக்குப் பகுதியில் உள்ள ராஜமஹால் குட்டஹள்ளியில் 59 மி.மீ மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மாலை 7.30 மணியளவில் மழை பெய்யத் தொடங்கியதால், அலுவலகம் செல்பவர்கள், மெட்ரோ ரெயில் நிலையங்களில் தஞ்சம் அடைந்தனர். விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டன, மீட்புப் பணிகள், வெள்ளத்தில் மூழ்கிய சாலைகள் மற்றும் வீடுகள், நீரில் மூழ்கிய விலையுயர்ந்த கார்கள் போன்ற மழை வெள்ள காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்த ஆண்டு, பெங்களூருவில் 1,706 மிமீ மழை பெய்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் 1,696 மிமீ மழை பதிவானதே அதிகபட்ச அளவாக இருந்து.

    சாமராஜநகர், சிக்கமகளூரு, ஹாசன், குடகு, பெங்களூரு ரூரல், சித்ரதுர்கா, ஹாசன், ஷிவமொக்கா, துமகுரு மற்றும் மண்டியா மாவட்டங்களிலும் கன மழை பெய்தது. தட்சிண கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி, சாமராஜநகர், குடகு, ஷிவமொக்கா, பெலகாவி, ஹாவேரி, பாகல்கோட், கலபுர்கி, கொப்பல் மற்றும் பல்லாரி ஆகிய மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

    ஏற்கனவே கடந்த மாதம் வரலாறு காணாத மழை வெளுத்து வாங்கியது. அப்போது சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதுடன், வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்தது. பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது. ஐடி நிறுவன ஊழியர்கள், வெள்ளத்திற்கு நடுவில் டிராக்டர் மூலம் அலுவலகம் சென்றனர்.

    சில பகுதிகளில் மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்த பெரும் பணக்காரர்களையும் மழை தவிக்கவிட்டது. பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அலுவலகம் செல்பவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் நிலை உருவானது. அந்த பாதிப்பில் இருந்து பொதுமக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குமரி கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழகத்தின் கடற்கரை மாவட்டங்களில் மழை பெய்யும்.
    • கடந்த சில தினங்களாக குறிப்பிட்ட ஒரு பகுதிகளில் அதிக மழை பெய்து வந்தது.

    கடலூர்:

    குமரி கடல் பகுதிகளில் மேல் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழக த்தின் கடற்கரை மாவட்ட ங்களில் மழை பெய்யும். மேலும் தமிழகத்தின் வட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மற்றும் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளனர். 

    கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. நேற்று கடலூர், நெல்லி க்குப்பம், பண்ருட்டி, குறி ஞ்சிப்பாடி, ஸ்ரீமுஷ்ணம், எஸ்.ஆர்.சி. குடித்தாங்கி, புவனகிரி , பரங்கிப்பேட்டை, வானமாதேவி, காட்டு மன்னார்கோவில், விருத்தா ச்சலம், சிதம்பரம், அண்ணா மலை நகர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.

    இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகின்றது.இதனை தொடர்ந்து கடலூர் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை பணிகளாக மரம் அறுக்கும் கருவி, படகு, உயிர் காக்கும் கருவி போன்றவற்றை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் தாழ்வான பகுதி கள் மற்றும் பேரிடர் காலத்தில் எங்கெங்கு பாதிப்பு ஏற்படும் பகுதிகள் என கண்ட றியப்பட்டு தொடர்ந்து கண்காணி க்கப்பட்டு வருகின்றது இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக குறிப்பிட்ட ஒரு பகுதிகளில் அதிக மழை பெய்து வந்த நிலையில் நேற்று ஒரே நாளில் எஸ்.ஆர்.சி. குடிதாங்கி என்ற பகுதியில் 13.5 சென்டி மீட்டர் அளவில் மழை பெய்துள்ளது குறிப்பிடத்த க்கதாகும்.

    இதன் காரணமாக அப்பகுதியில் வழக்கத்தை விட அதிகமாக மழை பெய்த காரணத்தினால் கூடுதல் பாதிப்பு ஏற்படக்கூடிய நிலை உள்ளது. இந்த நிலை யில் தற்போது தென்பெ ண்ணை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்கிறது. மேலும் சீதோஷ்ன மாற்றம் காரணமாக பொது மக்களுக்கு உடல் உபாதை கள் ஏற்பட்டு அவதி அடைந்து வருவதை காண முடிகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்த நிலையில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது அவசர அவசரமாக நடை பெற்று வருகிறது இதன் தொடர்ச்சியாக வருகிற தை மாதம் நெல் அறு வடை செய்யப்படும் என விவசாயி கள் தெரிவித்தனர்.

    மேலும் மாவட்ட முழு வதும் தொடர் மழை காரண மாக விவசாய பணிகள் ஆங்காங்கே தடை ஏற்பட்டு உள்ளது. கடலூர் மாவட்ட த்தில் மழை அளவு பின்வரு மாறு:- எஸ்ஆர்சி குடிதாங்கி - 135.0, ஸ்ரீமுஷ்ணம் - 68.2, வடக்குத்து - 58.0, ஆட்சியர் அலுவலகம் - 38.8, குறிஞ்சிப்பாடி - 30.0, கடலூர் - 28.0, பண்ருட்டி - 26.0, கொத்தவாச்சேரி - 20.0, மீ-மாத்தூர் - 15.0, புவ னகிரி - 14.0, பெல்லா ந்துறை - 12.0, பரங்கி ப்பேட்டை - 6.2, வானமா தேவி - 4.6, காட்டுமன்னா ர்கோயில் - 4.0, லக்கூர் - 3.2, அண்ணாமலைநகர் - 3.0,. விருத்தாசலம் - 2.0, குப்பநத்தம் - 1.6, சிதம்பரம் - 1.0 என மொத்தம் 470.60 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது.

    • தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • குறிப்பாக மேட்டூர், எடப்பாடி, கரியகோவில் ஆகிய பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்தது.

    சேலம்:

    குமரி கடல் பகுதியில் மேல் நிலவும் வழி மண்டல சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

    கன மழை

    இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்றிரவும் கன மழை பெய்தது. குறிப்பாக மேட்டூர், எடப்பாடி, கரியகோவில் ஆகிய பகுதிகளில் மீண்டும் கன மழை பெய்தது. இந்த மழையால் அந்த பகுதிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

    தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளி–களில் தண்ணீர் தேங்கியது. இதனால் எங்கு பார்த்தாலும் தண்ணீர் காடாக காட்சி அளித்தது.

    சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்ட–லாம்பட்டி, ஜங்சன் என அனைத்து பகுதிகளிலும் மழை தூறலாக நீடித்தது. இதனால் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது.

    218 மி.மீ. மழை

    சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக மேட்டூரில் 60.2 மி.மீ. மழை பெய்துள்ளது. எடப்பாடி 28.2, கரியகோவில் 22, ஓமலூர் 20, காைடயாம்பட்டி 20, சங்ககிரி 16.2, பெத்தநாயக்கன் பாளையம் 15, ஆனைமடுவு 12, ஏற்காடு 10.2, ஆத்தூர் 9, சேலம் 5.2 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 218 மி.மீ. மழை பெய்துள்ளது. 

    • நேற்று காலை முதலே மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது.
    • இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய கன மழை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் மட்டும் சுற்றுப்புற பகுதியில் நேற்று காலை முதலே மேக மூட்டமாகவும், குளிர்காற்றும் வீசி வந்தது. தீபாவளி சமயம் என்பதால் துணிக்கடை, நகைக்கடை, பேன்சி ஸ்டோர்கள், மளிகை கடைகள் உள்ளிட்ட கடைகளில் காலை முதலே கூட்டம் அதிகம் காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று மாலை 4 மணியளவில் தொடங்கிய கன மழை 3 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. சாலையோர வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். பொதுமக்கள் மற்றும் வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் பணியாளர்கள் பாதிக்கப்பட்டனர்.

    சாலையில் மற்றும் கோம்பு பள்ளத்தில் மழை வெள்ளம் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இரவு முழுவதும் கனமழை யின் காரணமாக குளிர்ந்த சூழல் நிலவியது.

    • நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது.
    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. தொடர்ந்து வானம் மேக மூட்டமாக காட்சி அளிக்கிறது.

    இதையொட்டி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் மீண்டும் கன மழை ெபய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது- சேலம், நாமக்கல் மாவட்டங்களில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது .

    குறிப்பாக காைடயாம்பட்டி, வீரகனூரில் நேற்றிரவு கனமழை பெய்தது. இந்த மழைாயல் சாலைகளில் தண்ணீர் பெ ருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. வயல்வெளிகளிலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    மாவட்டத்தில் பெய்யும் தொடர் மழையால் புது, ஏரி, மூக்கனேரி உள்பட பல ஏரிகள் நிரம்பி உள்ளள. மேலும் 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பும் நிலையில் உள்ளது. 50 சதவீத ஏரிகள் பாதியளவு நிரம்பி உள்ளன.

    மாவட்டத்தில் அதிக பட்சமாக இன்று காலை 8 மணி வரை காடையாம்பட்டியில் 43 மி.மீ. மழை பதிவாகி உள்ளது . வீரகனூர் 34, ஏற்காடு 8.6, கரியகோவில் 2, சேலம் 1, ஆனைமடுவு 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 89.60 மி.மீ. மைழை பெய்துள்ளது.  

    • சிக்கத்தம்பூரில் கனமழை கொட்டி தீர்த்தது
    • கனமழையாக இரவு வரை நீடித்தது.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் சிக்கத்தம்பூர் ஊராட்சியில் நேற்றிரவு கன மழை பொழிந்தது. நேற்று காலையில் சுட்டெரித்த வெயில் மாலை வேளையில் குளிர்காற்றுடன், இடி மின்னலுடன் மழை பொழிய ஆரம்பித்தது. லேசான தூறலுடன் ஆரம்பித்து கனமழையாக இரவு வரை நீடித்தது.

    சிக்கத்தம்பூரை அடுத்துள்ள சேர்வைராயன்குட்டை பகுதியில் பெய்த கன மழையால், குட்டை நிரம்பி வழிந்து, தண்ணீர் சிக்கத்தம்பூர் சாலைகளில் ஆறாக ஓடியது. இரு சக்கர வாகனங்கள், கார்கள் தண்ணீரில் தத்தளித்த படியே சென்றன. சிக்கத்தம்பூர் ஊராட்சி தலைவர் சசிகலாகார்த்திக், முன்னெச்செரிக்கையாக சாலையோரத்தில் உள்ள வடிகால் வாய்க்கால்களை பொக்லைன் மூலம் தூர்வாரியிருந்ததால், சாலைகளில் வந்த தண்ணீரின் நீரோட்டம் குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்யாமல் , பாதிப்பின்றி சென்றது.இருப்பினும், கனமழை, நீரோட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உப்பிலியபுரம் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நள்ளிரவு வரை போக்குவரத்து, பாதுகாப்பு பணியிணில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

    • மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது.
    • எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதிகளில் வயல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது . அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு கன மழை பெய்தது. குறிப்பாக எடப்பாடி, சங்ககிரி, தம்மம்பட்டி, மேட்டூர் ஓமலூர்ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கன மழை பெய்தது .

    வெள்ள காடாக காட்சி...

    சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் பெய்த இந்த கன மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. எடப்பாடி மற்றும் சங்ககிரி பகுதிகளில் வயல்வெளிகளில் எங்கு பார்த்தாலும் வெள்ள காடாக காட்சி அளித்தது.

    கோடை காலத்தில் பெய்யும் இந்த மழை விவசாய பயிர்களுக்கு உகந்ததாக இருககும் என்பதாலும், தொடர் மழையால் நீர் நிலைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சேலம் அருகே உள்ள கன்னங்குறிச்சி புது ஏரி உள்பட மாவட்டத்தில் உள்ள பல ஏரிகள் நிரம்பி உள்ளது. மேலும் பல ஏரிகள் பாதி அளவு நிரம்பி உள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டதுடன் காட்சி அளித்தது .

    337.5 மி.மீ. பதிவு

    மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 63 மி.மீ. மழை பெய்துள்ளது. சங்ககிரி 54, தம்மம்பட்டி 37, மேட்டூர் 30.2, ஓமலூர் 28.4, ஆனை மடுவு 27, பெத்தநாயக்கன் பாளையம் 22.5, கரியகோவில் 21, ஏற்காடு 15.6, சேலம் 12.2, காடையாம்பட்டி 10, ஆத்தூர் 8.4, வீரகனூர் 5, கெங்கவல்லி 3 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 337.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இன்று காலையும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.

    • பண்ருட்டியில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
    • திடீர் மழையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    கடலூர்:

    பண்ருட்டியில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது திடீரென இடி, மின்னல், சூறைகாற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில்மழைநீர் வெள்ளநீராக பெருக் கெடுத்து ஓடியது. நகரின் முக்கிய தெருக்கள், எல்.என்.புரம் உள்ளிட்டபகுதிகளில் மின்தடை செய்யப்பட்டது.பலகிரா மங்கள் இருளில்மூழ்கியது. திடீர் மழையால் வாகன ஓட்டி கள் கடும் அவதிக்கு ள்ளா கினர்.வாகனங்க ளில்முகப்பு விளக்கை எரியவி ட்டபடி ஊர்ந்து சென்றனர். தெருக்கள் சாலைகளில் மழைநீர் குளம்போல் தேங்கி இருந்தது பண்ருட்டி சென்னை சாலை, பண்ருட்டி கும்பகோ ணம் சாலை குளம் போல காட்சியளித்தது. சாலை களில் குண்டும் குழியுமான பள்ளங்களில் வாகன ஓட்டிகள் விழுந்து எழுந்து செல்லும் காட்சி பரிதாபமாக இருந்தது.

    • கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.
    • அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கன மழை பெய்தது.

    ஏற்காட்டில் கன மழை

    குறிப்பாக ஏற்காட்டில் நேற்றிரவு 9 தொடங்கிய மழை 3 மணி நேரம் நீடித்தது. இந்த மழையால் தாழ்வான ப குதிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியது. ஏற்காட்டில் நேற்றிரவு மழை பெய்த நேரத்தில் 3 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டனர்.இதே போல ஓமலூரில் கன மழை பெய்தது. சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, ஜங்சன், கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் இரவு 7 மணிக்கு தொடங்கிய மழை ஒரு மணி நேரம் கன மழை யாக பெய்தது . தொடர்ந்து சாரல் மழையாக நீடித்தது . மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.

    91.4 மி.மீ. மழை

    மாவட்டத்தில் அதிக பட்சமாக ஏற்காட்டில் 30 மி.மீ. மழை பெய்துள்ளது. ஓமலூர் 28, சேலம் 21.6, சங்ககிரி 8.2, காடையாம்பட்டி 3.4, என மாவட்டம் முழுவதும் 91.4 மி.மீ. மழை பெய்துள்ளது. 

    • சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வருகிறது.
    • 25, 26-ந் தேதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    சேலம்:

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக லேசான மைழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக வருகிற 25, 26-ந் தேதிகளில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது-

    சேலம், நாமக்கல் மாவட்டங்களில் வருகிற 25 மற்றும் 26-ந் தேதிகளில் ஓரிரு இடங்களில் கன மைைழ பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் பொது மக்கள் எச்சரிக்ககையாக இருக்க வேண்டும் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    ×